Showing posts with label balakumaran novels. Show all posts
Showing posts with label balakumaran novels. Show all posts

Download writer balakumaran novels:kanavugal virpavan


"எழுத்துச் சித்தர், ஞானி, மஹான் பாலகுமாரன்” அவர்களால் 1990-ம் வருடம் எழுதி வெளிடப்பட்ட "கனவுகள் விற்பவன்" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை. ( பக்கம் 178 – 184 )
சாக்தன் என்பவன் சிவம். அவன் வழிபாடு சக்தி. பார்த்தசாரதியை சக்தி வழிபாடு செய்யச் சொல்ல வேண்டும். எப்படி... என்ன விதம்... அதுதான் ஊரில் ஒரு கோயில் இருக்கிறதே . பார்த்தசாரதி எதற்கு இன்னொரு ஆள். ஏன் இன்னொரு கோயில்.
என்ன புதிய முறை... சாக்த வழிபாடு எப்படிச் செய்வது.? இங்கே... சாக்த வழிபாடு எப்படிச் செய்ய வேண்டும். பெண்ணை வழிபடுதல் என்றால், பெண் மாதிரி ஒரு உருவம் வைத்து வழிபடுதலா...
இல்லை. பெண்ணையே வழிபடுதல்... பெண்களை வழிபடுதல். பெண்ணைச் சிலையாக்காமல் எல்லாப் பெண்களையும் மதித்தல். பெண்ணை அவள் சகல ரூபங்களோடும் ஏற்றுக்கொள்ளுதல்.
அவளின் கோபதாபத்தோடு புரிந்து கொள்ளுதல். அவள் உடற்கூற்றை ஏற்றுக் கொள்ளுதல். அவள் பலம் பலவீனம் பிரிவு காட்டாது இரண்டுமே சரியென்று தன்னுள் மதித்தல்.
வெறும் ரத்தப் பெருக்கு என்று தாழ்ச்சி காட்டாது இது இயற்கையின் லீலை என்று உயர்த்தி வைத்தல். சித்து விளையாட்டு என்று ஞானம் கொள்ளுதல்.
வயிறும், யோனியும், முலைகளும் ஞானம் தரும் உபாயம் என்று போற்றுதல். உன் விருப்பம் என்ன... உன் ஆசை எது.. உன்னைப் போற்றுதல் எப்படி என்று அவளிடமே யாசித்தல்.
அவளுக்கு கீழ்ப்படிந்து நடத்தல். 'நீ ஆளுமை செய்' என்று அவளிடம் தன்னை ஒப்புவித்தல். 'எனக்கு உண்டானவள் நீ 'யென்று சொல்லாது உனக்கு உண்டானவன் நானென்று ஏற்றல். 'என்னை இயக்கு' என்று கட்டளைக்குக் காத்திருத்தல்.
இது சரியா... நான் யோசிப்பது சரியா.. இது நல்ல முறையா.. ஏன் சாக்தம் இல்லை இப்போது. ஏன் அழிந்து போயிற்று இந்த முறை.
கிடா வெட்டலும், தீ மிதித்தலும், அழகு குத்தி நிற்றலும், என சக்தி வழிபாடு ஆண் ஆட்டமாய் போயிற்று. பெண்ணுக்கு அங்கே என்ன உயர்வு? பெண்ணை ஏன் மறந்து போய், ஆண் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டான்.
சக்தி வழிபாட்டில் பெண்ணல்லவோ முக்கியம். பெண் அல்லவோ மூத்தவள், உடல் வளர்ச்சியில், மன முதிர்ச்சியில் பெண்ணல்லவோ மூத்தவள்.
நான் யோசிப்பது சரியா? ஏன் சாக்த வழிபாடு காணாது போயிற்று? ஆண் வழிபட வெட்கப்பட்டு விட்டானா... இல்லை பெண் அந்நியமாகிவிட்டாளா? இந்த பூமி பெண்ணை வழிபட்ட பூமிதானே... காமகோட்டம் என்று பெண்ணுக்குத் தனியே வழிபாடு நடத்திய ஊர்தானே.
இந்த பூமியில் யுத்தம் வந்து அந்நியர் உள்ளே நுழைந்து போரில் ஆண்கள் சாக, பெண்கள் அதிகமாகி, யுத்த பூமியில் அந்நியர் ஆளுமையில் பெண் அடக்கப்பட, அவளைக் கவர்ந்து சென்றுவிட,
அது அவமானமாகி நீ இருப்பின் எவனாவது கடத்த வருவான், நீ இல்லாது போ என்று விரட்டப்பட்டு, கொல்லப்பட்டு, சுடுகாட்டு சாம்பலே தன்னை மறந்து சிவனே பெரிதாயிற்றா?
சரணடைந்த தத்துவமே பெரியதாயிற்றா? எது நடந்தாலும் 'அவன் செயல்' என்று சும்மா இருத்தலில் பெண் மதிப்பற்று போனாளா. இயக்கமே குறைந்து, இது விதி, என் தலையெழுத்து, மன்றாடு... அவன் உன்னை மீட்பான் என்கிற தத்துவம் வளர்ந்துவிட்டதா?
அந்நியனிடம் சரணடைந்து, கடவுளிடம் சரணடைவது எளிதான விஷயமாய் போயிற்றா? நான் தவறோ.. யோசிப்பது தவறோ... சாக்தம் குறைந்ததற்குக் காரணம் அந்நிய மதத்தினர் ஆட்சியே.
இன்று மறுபடி சாக்தம் செய்தால் என்ன? சக்தி வழிபாடு நடத்தினால் என்ன? பெண்ணை மீண்டும் முதலாய் நிறுத்தினால் என்ன? பூசித்தால் என்ன? உன்னால் உன்னுள் உன்னோடு என்று மதித்தால் என்ன?
கிடாய் வெட்டுவது பூஜையில்லை. போர் வெறி. தீ மிதித்தல் வழிபாடு இல்லை. தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தண்டனை. அலகுக் குத்தல் சரியில்லை.. தன் வேதனையில் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் ஆசை.
பெண்ணைப் பூஜித்து, பெண்ணைக் கௌரவப்படுத்தி, பெண்ணால் பெரியவனாகி, பெண்ணை அங்கீகரித்து, பெண்ணோடு பிணைந்து வாழ்தலை மறுபடி செய்தால் என்ன?
சாக்தம் அதுதானே... என்னுள் பாதி பெண்தானே? என் இயக்கம் நீ என்பதுதானே. என்னைத் தூண்டி விடு என்று சொல்வதுதானே. எனக்குத் துணை நில் என்பதுதானே?
மறுபடி சாக்தம் வருமா? வரவழைக்க முடியுமா? பெண்ணை இந்த சமூகம் மதிக்கும் வண்ணம் ஒரு அமைப்பு நடத்த இயலுமா? பார்த்தசாரதிக்கு இது புரியுமா? புரிந்தாலும் பொறுமையாய் செய்ய இயலுமா?
பார்த்தசாரதி இருக்கட்டும். என்னால் இயலுமா? நான் தெரியாமல் யோசிக்கிறேனா? அம்மா, எனக்குத் தெளிவு வருகிறதா? என் நினைவுகள் சரியா?
சரி... இப்படி ஒரு வழிபாட்டைப் பெண் ஏற்றுக்கொள்வாளா? காலங்காலமாய் அடிமையாகிக் கிடந்த வம்சம், அது மேடையேறி விழுந்து வணங்கினால் வாங்கிக் கொள்ளுமா?
வணங்க என்னால் முடியும். வணக்கம் தாங்க அவளால் முடியுமா?
புரட்டிப் போடுகிறேனோ.. இயற்கைக்கு மாறாய் யோசிக்கிறேனோ... அவள் என்னுள் பாதிதானே. ஏன் உயர்த்துகிறேன்? என்னைவிட உயர்வு என்று ஏன் யோசிக்கிறேன். ஏன் அவளைப் பூஜை செய்ய நினைக்கிறேன்?
சமமாக்க தலைக்குமேல் உயர்த்தித் தூக்க வேண்டும். அது சேற்றிலிருக்கிறது. இழுத்துக் கரையேற்ற வேண்டும். அது அதல பாதாளத்தில் இருக்கிறது முதலில் மேலே தூக்க வேண்டும்.
எனக்குப் புரிகிறது.கொஞ்சம் உயர்த்தி நிறுத்தினால்தான் அது என் உயரத்திற்கு வரும். என் மீது நம்பிக்கை கொள்ளும். பீடம் போட்டு உட்கார வைத்தால்தான் எனக்குச் சமமாய் நடை போடத் துவங்கும்.
நான் சரியா? என் யோசிப்பு சரியா? உள்ளே முழு சூரியன் பாலு ஐயருக்கு தோன்றியது.
என்னால் முடியுமா? என்னால் முடிந்ததைத்தானே இன்னொருவருக்கு உபதேசிக்க முடியும்.
இது.. இந்தக் கல் என்ன பாடுபடுகிறது. என்னை நானே அவமானப்படுத்திக் கொள்ள வைக்கிறது. இது அவமானமா.. பெண்ணை வணங்குதல் ஆணுக்கு இழுக்கா. இந்தக் கல், இதை வணங்குகிறேன்...
இதைவிட நான் உசத்தி இல்லையா? கல்லை வணங்குகிறவன் பெண்ணை வணங்கக்கூடாதா? கல்லைப் பெண்ணாய் வணங்க முடிகிறது. பெண்ணை கல்லாய் பார்க்க முடியாதா?
பெண்ணை ஏன் போகமாய் நினைக்க வேண்டும். சரி, இது கல். பெண் கல். அதாவது சரஸ்வதி. சரி, இதை என் மனைவி சரஸ்வதி என்று நினைத்துக் கொள்கிறேன்.
சரஸ்வதி உனக்கு நமஸ்காரம் என்று கைகூப்ப முடியுமா? விழுந்து வணங்க முடியுமா? பார்க்கலாம்.
வணங்கு... மனைவியை விழுந்து வணங்கு... இந்தக் கல் என் மனைவி சரஸ்வதி. இது அம்மன் கோவில் கல்லெனில் சரஸ்வதி அம்மன் இல்லையா?... அம்மன் சாயல் இல்லையா?...
சாயல் என்ன. இதுவே சரஸ்வதி இல்லையா. வணங்கு. அம்மன் கோயில் கல்லை பெண் என்று வணங்கு. மகள் என்று வணங்கு. தாய் என்று சொல்லி தெருவில் போகிற பெண்ணை வணங்கு.
எது தடுக்கிறது உனக்கு? எழுந்திரு, வணங்கு.
அம்மா என்று ஒருமுறை, அருமை மனைவி என்று மறுமுறை, அன்பு மகள் என்று ஒரு முறை வணங்கு. ஊரில் உள்ள எல்லாப் பெண்களும் நீ என்று வணங்கு.
இல்லை. யோசிப்போம். இந்த இடம் விட்டு வேறு இடம் போய் யோசிப்போம். ஒரே இடத்தில் உட்கார ஒரே சிந்தனை வருகிறது. உள்ளே புரண்டு யோசிக்க மறுக்கிறது. அவிழ்த்துக் கட்டு. குலைத்துக் கட்டு. கலைத்துக் கட்டு.
எண்ணங்களை உற்றுப் பார்ப்பதே தியானம். எந்தத் தடையுமின்றி அதன் போக்கில் அதனை அறிவதே தியானம். ஏதோ ஒரு புள்ளியில் நில்லாது, ஒன்றையே யோசிக்காது புரட்டிப் புரட்டிப் போடு.
உட்கார்ந்து நடந்து எல்லா நிலையிலும் மாறி மாறி யோசனைகளைக் கவனி. எண்ணங்களை அதன் போக்கில் வளர விடு. தானாய் பிரிந்து கிளை விட்டு பூத்துக் குலுங்குவதைக் கவனி.
இலையும், பூவும், முள்ளும், கிளையும், காயும், கனியுமாய் வளர்வதைப் பார். மொத்த தாவரத்தையும் சுவீகரி. ஏதேனும் ஒன்றை மட்டும் உனக்குப் பிடித்தது என்று தொடாதே. எல்லாம் எடு. எல்லாம் தொடு.
எழுந்திரு பாலு. நடந்தபடி யோசி. புள்ளியிலிருந்து விலகு. எழுந்து நடக்க எல்லாம் மறந்து போயிற்று. யோசித்ததெல்லாம் காணாமல் போயிற்று. உள்ளே புத்தியில் வெறுமை படர்ந்தது.
மனசு மறுபடி இருட்டாயிற்று. தன்னுடம்பு மறந்து திசை தெரியாது போயிற்று. எல்லா சப்தமும் அந்நியமாய், தனக்கு சம்பந்தமற்றதாய், தன்னோடு சேராததாய் தோன்றியது.
தான் மட்டுமே இருப்பது புரிந்தது. அது உடம்பல்ல. புத்தியல்ல. மனசல்ல. புத்தியின் தந்திரமல்ல. மனசின் ஆர்வமல்ல. கணக்கு போடுகிற வேதனையில்லை. உணர்ச்சியின் ஆட்டமில்லை.
உள்ளே ஏதோ லேசாயிற்று. அதுதான் 'நான்' என்று புரிந்தது. வயல்வெளி தாண்டினார். எத்தனை நேரம், எந்த வழி என்கிற பிரக்ஞையில்லாது போனார்.
(இந்தப் பதிவினை வாசித்த பிறகு ஏற்படும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் முழுவதும் உரித்தானவர் இதை எழுத்தாக்கி படைப்பித்த ஆசிரியர் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களே.)
நன்றி.
குருவே துணை.
Share:

Writer Balakumaran Dhaasi Novel Free Download


 Balakumaran is one of the best Tamil novel writers. This novel Dhaasi wrote by writer balakumaran and get the PDF version of this book for free download from here. Its is one of his notable novel in Tamil. If you are looking for this Dhaasi novel, download this novel in the PDF version from here

 

Book Details:

  • Book Name: Dhaasi
  • Author: Balakumaran
  • Genre: Fiction
  • Category: Novels
  • Total pages: 40
Share:

Download writer balakumaran novels:Mercury pookkal | mercury pookkal tamil novel free download

மெர்குரிப் பூக்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனதன் இயல்பில் அப்படி அப்படியே பதிந்து நிற்கிறது மனதில் .

mercury pookkal tamil novel free download
சாவித்ரியும் மன்னியும் வைராக்யக்காரர்கள் போல சித்தரிக்கப் பட்டுள்ளனர். பெண்கள் பெரும்பான்மையும் இங்கு அப்படித்தானே! அவர்களிடத்தில் போலித் தனம் இல்லை வேஷம் இல்லை. இன்ன விஷயம் இப்படித் தான் அதைக் கடந்து வந்தால் ஆகப்போவது அத்தனைக்கும் பொறுப்பை ஏற்கவோ தாங்கிக் கொண்டு தாண்டிச் செல்லவோ முடியாதவர்களுக்கு புத்தியும் அறிவும் குறிப்பிட்ட எல்லையில் சைக்கிள் போல ஸ்டாண்ட் இட்டு நிறுத்தி வைக்கப் படுதலே சால உத்தமம் என்ற நிஜத்தை அறிந்தவர்களாக அவர்கள் இருப்பதில் கண்ணாடி பார்த்துக் கொள்வதைப் போலத்தான் உணர வேண்டியதாக இருக்கிறது.

சியாமளி ஆரம்பத்தில் பயமுறுத்துகிறாள். அவள் நியாயம் அவளுக்கு! அதை தவறென்று சொல்லல் ஆகுமோ!? குழந்தை கூட ரெண்டாம் பட்சம் என அவளை எண்ண வைத்தது எது? தண்டபாணி என்ன மனிதனய்யா அவன்? அட அசடே !என்ற எண்ணமே மேலோங்குகிறது. மளிகைக்கடை கல்லாப் பெட்டியில் பொங்கிக் குலுங்கும் சில்லரைகளாய் இப்படிப் பட்ட கணவர்கள் நிறைந்த தேசம் தானே நம்முடையது. மனைவியைப்புரிந்து கொண்டு அவளைக் கொண்டாடுவது என்பது கன கஷ்டமான காரியம் தான் போலும். இடம் கொடுத்தால் உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளக் கூடும் என்று எவர் போதித்திருப்பார்கள் அவர்களுக்கு? அம்மாக்களா? அப்பாக்களா? ஆயின் அவர்களே இப்படிப் பட்ட கணவர்களுக்கு பிரதிநிதிகள். பிறகு சியாமளி அவனை நொந்து கொண்டு வெறுத்து பிரயோஜனம் என்ன?!

சியாமளி, சங்கரனுடன் பேசும் இடங்கள் எல்லாம் அவளது நியாயத்தை புத்திக்கு உரைத்தாலும் கடைசியில் அவள் சங்கரனுக்கு எதிராக முற்றாக வெறுத்து கதவடைக்கையில் எஞ்சும் நிம்மதியே பரிபூரணமாகத் தெரிகிறது. தொடர்ந்து கலவரத்துடனே படித்துக் கொண்டு கடக்கையில் இவ்விடம் ஒரு சின்ன சந்தோசம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. இதுவே சியாமளிக்கு நல்லது என்று ஆட்டு மந்தை சமூகத்தின் அடுத்த வாரிசாய் சொல்லிக் கொள்ள முடிகிறது.

அவள் சங்கரனுடன் ரயிலேறிப் போயிருந்தாலும் தண்டபாணி அவளது குழந்தை மற்றும் மன்னியின் உலகம் ஒன்றும் ஸ்தம்பித்து நின்றிருக்கப் போவதில்லை. அவரவர் பாடு நிகழ்ந்து கொண்டே தான் இருந்திருக்கும். ஆனால் ஊர் வாய்க்கு மெல்ல அண்டா நிறைய அவல் கிடைத்திருக்கும். சியாமளி அப்படிப் போனதற்கு மன்னியை விடுங்கள் அவளது பெண் சிலுவை சுமக்க நேர்ந்திருக்கும். இதைச் சியாமளி உணர அவளுக்கு மன்னி வேண்டியிருந்திருக்கிறாள்.

ரங்கசாமியின் அம்மா தொழிற்சாலை அடித்து நொறுக்கப்பட்ட பின்பு அவரைத் தேடிக் கொண்டு வந்து கடைசியாக பேசுகையில் கண்ணாடிக் குவளை விழுந்து நொறுங்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது உள்ளுக்குள்ளே. நாம் எதை எதையோ நமது உடமை என்று நினைத்துக் கொண்டு ரொம்பத் தான் அதைக் கட்டி காப்பாற்றி காபந்து பண்ணிக்கொள்ள பார்க்கிறோம், விளைவுகளோ படு பூஜ்யமாய் நம்மைப் பார்த்து சிரிக்கையில் பல குற்றச்சாட்டுகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டியவர்களாய் ஆகிறோம்.

கணேசன், சாவித்ரியோடு நிறைவாய் குடும்பம் நடத்தி விட்டு எதற்காக சாகிறோம் யாரால் சாகடிக்கப் படுகிறோம் என்பதே அறியாமல் செத்துப் போகிறான். இந்தக் கதையில் பரிபூர்ணமானவனாக இவனைத் தான் எண்ண வேண்டியிருக்கிறது.

அடுத்தவன் மனைவியின் மீது காதல் கொள்ளும் சங்கரன். உணர்ச்சி மேலிடப் பேசிப் பேசியே போராட்டத்தை முடுக்கி விட்டு ஒரு வகையில் கணேசன் சாவிற்கு காரணமானவனாகிப் போன கோபாலன், மனைவியைக் கொண்டாடத் தெரியாத, அதைக்  கற்றுக் கொண்டிருக்காத தண்டபாணி .

அப்பா சேர்த்த சொத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் கூடிப் போய் கல்யாணம் குடும்பம் குழந்தைகள் என்ற பந்தத்தின் சுவை அறியக் கூட மறந்து போன ரங்கசாமி.

இவர்கள் எல்லோரும் எதனெதன் பொருட்டோ கதையில் எஞ்சி நிற்கையில் கணேசனுக்கு எல்லாம் நிறைவாய் கிடைத்த காரணத்தால் தான் அவனது வாழ்வை விதி அப்படி முடித்ததோ !?

மெர்க்குரிப் பூக்கள் முன்பே வாசித்த அனுபவம் இருப்பவர்கள் கூட மீண்டும் ஒருமுறை வாசிக்கலாம். வயது ஏற, ஏற ஒவ்வொரு நாவலும் தரும் அனுபவங்களும் மாறித்தான் போகின்றன.

Download Mercury Pookal Book Here 

Source: https://www.dinamani.com/
Share:

writer balakumaran novels and books: manal nadhi


"எழுத்துச் சித்தர், ஞானி, மஹான் பாலகுமாரன்” அவர்களால் 1994-ம் வருடம் எழுதி வெளிடப்பட்ட "மணல் நதி" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை. ( பக்கம் 88 - 91)
"உரிமை அதிகம் வர கசப்பு வருகிறது, கசப்பு உரிமையை எதிர்த்து சண்டை தருகிறது."
"அப்ப எப்படி வாழறது?"
"உரிமை மீறாமலும், உரிமை இல்லை என்று போகாமலும்."
"புரியலையே..."
"ஆசையை தீர்க்காமலும், அது இல்லை என்று வன்முறையுடன் அப்புறப்படுத்தாமலும்."
"எப்படி?"
"ஆசையை உற்றுப் பார்த்தல். உரிமை தரப்பட்டாலும் இது எதற்கு என்று உரிமையை உற்றுப் பார்த்தல்... ஆசை அல்லது உரிமை தோன்றும்போதே தெளிவோடு இருத்தல் இருக்க, அத்துமீற மாட்டோம்."
"இந்த உத்துப் பார்க்கறதுன்னா என்ன? எப்படி பார்க்கறது?"
"மௌனமாய் இருக்கும்போது முடியும்."
"வாய் பேசாதயா?"
"வாய் மட்டுமல்ல, புத்தியும் பேசக்கூடாது."
"இது எப்படி?"
"தியானம்."
"தியானம்னா..."
"மனம், மனசைப் பார்த்துக் கொண்டேயிருப்பது. அப்படி பார்க்கப் பார்க்க மனம் சுருங்கும். எண்ணம் மறையும். எண்ணமே இல்லாத விநாடி மனசே இல்லாத நேரம் வரும்?"
"மனசு அலையுதே..."
"மூச்சு ஒழுங்குபடுத்த மனம் அலையல் குறையும்."
"எப்படி?"
"மனசுக்கும் மூச்சுக்கும் சம்பந்தம் உண்டு. மனம் அசைய மூச்சு. மூச்சு பறக்க மனம் அசையும். கோபத்தில், காமத்தில் மூச்சு மாறும். மூச்சு தாளம் பிறழ கோபம், காமம் அதிகமாகும்."
"அடேயப்பா. உங்களுக்கு தியானம் தெரியுமா?"
சீனுவாசன் மௌனமாய் இருந்தான்.
எனக்கு கத்துக் கொடுங்களேன்."
சரி."
"எல்லார்க்கும் தியானம் வருமா?"
"எவருக்கும் வரும்... எவரிலும் இந்தத் திறன் உண்டு. கத்துக்கறதில் இல்லை. இடைவிடாது பயிற்சி செய்யறதுல இருக்கு."
நாடி சுத்தி என்கிற மூச்சுப் பயிற்சி, உட்காரும் விதம், மனசு தேடும் சொல், அதில் வரும் சிரமம், விடாது மனம் தேடி பின்னால் போகும் முறை, ஆரம்ப சிரமம், திகைப்பு, வலி, மயக்கம் எல்லாம் சொன்னான்.
"இருவது நிமிஷம் அப்படியே இருங்க. உங்களுக்குள்ளேயே இருங்க. பழகப் பழக சுலபமாயிடும். இருக்கறது சந்தோஷமாயிடும்."
அவர்கள் கண்மூடி அசையாது உட்கார்ந்திருந்தார்கள்.
சீனுவாசன் நோட் புக்கிலிருந்து பேப்பர் கிழித்து எழுதினான்.
நண்பர்களுக்கு.
சிரத்தையுடன் எது செய்தாலும் சிரார்த்தம்.மூத்தோருக்கு செய்யும் நன்றி. நான் சிரார்த்தம் செய்யவில்லை. மாறாய் நம் மூத்தோர்கள் நமக்குத் தந்த ஒரு பயிற்சியை சிரத்தையுடன் உங்களுக்குத் தந்து விட்டேன்.
இது இறையருள். புத்தன் கருணை. என் காசி, கயா, அலஹாபாத் யாத்திரை பூர்த்தியாயிற்று. என் முன்னோர்கள் சொர்க்கம் போனார்கள். இனி எனக்காய் போகவேண்டும்.
நான் ஹரித்வார், ரிஷிகேசம் போகிறேன். சில நாட்கள் அங்கு தனிமையில் இருப்பேன். உள்ளே மனசு உட்கார்ந்து விட்டால் போதும். உட்கார்ந்த இடமே காசி, கயா.
மனசு செயலை விட்டால் போதும், விட்ட இடமே வைகுந்தம். மனம் உற்றுப் பார்க்க மனம் சுடுவது தெரியும். நம் தஹிப்பு புரியும். சட்டி சுட்டது. கை விட்டது.
இது பூடகமே இல்லை. நான் தித்திப்பு என்பதை நீங்கள் தின்றாலொழிய தெரியாது. தெரிந்த பிறகு கேள்வி வராது. நான் வருகிறேன். நீங்கள் செய்த உதவிகள் அனைத்தும் நெஞ்சில் இருக்கும்.
மணலை நதியென்று பார்த்தோம். திகைத்தோம். அது நதியா? மணலா? இரண்டும்தான். நதியெனில் நதி. மணலெனில் மணல்.
வாழ்கையும் அப்படித்தான். துக்கமெனில் துக்கம். சந்தோஷமெனில் சந்தோஷம். நாம் கூட்டமா, தனியா? நம்மிடையே கேள்வி வந்தது. நாம் கூட்டம்தான்.
ஆனால், கூட்டத்திலும் தனிதான் மணல். அது நதியாய் வெறும் கூட்டமாய் பரவிக் கிடக்கிறது. நீரில் குளிர்ந்தும் புரண்டும், வெப்பக் காற்றில் ஆவித்தும் அலைக்கழிந்தும் இடம் மாறுகிறது.
வாழ்க்கை ஒரு மணல் நதி. யோசிக்க உங்களுக்கும் இது புரியும். உலகம் சிறியது. எங்கேனும் சந்திப்போம்.
என்றென்றும் அன்புடன்,
சீனுவாசன்.
(இந்தப் பதிவினை வாசித்த பிறகு ஏற்படும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் முழுவதும் உரித்தானவர் இதை எழுத்தாக்கி படைப்பித்த ஆசிரியர் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களே.)
நன்றி.
குருவே துணை.
Share:

Writer Balakumaran Kadaavul Veedu Novel Free Download

 


Kadaavul Veedu is an excellent novel from Tamil literature. It is a fascinating book by Balakumaran. This book supposed to one of the great works of Balakumaran. A lot of novels stories and screenplay wrote Balakumaran in his entire life. 

Writer Balakumaran Kadaavul Veedu Novel Free Download


  • Book Name: Kadaavul Veedu
  • Author: Balakumaran
  • Genre: Fiction
  • Category: Novels
  • Total pages: 54
  • PDF Size: 14 Mb
Share:

Best Words by Writer Balakumaran 1

மனதைக் கட்டாதே. அது முடியாத காரியம். எகிறி திருப்பி அடிக்கும். மனதை கவனி. தானே பின்வாங்கும் சுருங்கும். காணாது போகும்
மந்திர ஜபம் ஒரு தந்திரம். 
மந்திரத்தை கவனித்தபடிக் சொல். எது மந்திரம் சொல்கிறது மனம்தானே. மனதை கவனிக்கத் துவங்கி விடுவாய் . 
செய்ய செய்ய ஏதோ ஒரு கணத்தில் இந்த கவனித்தல் பிடிபட்டுவிடும்.
செய்ய வேண்டுவது வைராக்யம். வைராக்யம் ஒரு தீர்மானம். திடம். இதற்கு காரணம் முன்னேறும் ஆசை.
இந்த ஆசை 'ஐயோ ஒண்ணும் தெரியலையே' என்கிற துக்கதில் வரும்.
எனக்கு தெரியும் என நினைக்க கற்க முடியாது. 
மன ஒருமையைக் கல். மற்றறெல்லாமும் நடு நிலையில் நின்று கற்கலாம். இதுவே கசடறக் கற்றல்.
Share:

Writer Balakumaran Kalyana murungai Novel Free Download

 Kalyana Murungai is a fiction novel collection from the Tamil writer. Balakumaran is a well-known person in Tamil literature and also a prominent author who wrote this book. This book has a total of 30 pages, and the PDF size is only 07 MB. 



Writer Balakumaran Kalyana murungai Novel Free Download

  • Book Name: Kalyana Murungai
  • Author: Balakumaran
  • Genre: Fiction
  • Category: Novels
  • Total pages: 30
  • PDF Size: 07 Mb
Share:

Writer Balakumaran Udayaar Part – 1 Novel Free Download

 

வகை:வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:448
பதிப்பு:13
Published Year:2010

தஞ்சை  பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும்  தீராத காதல் உண்டு. 

உடையாருடைய ஜந்தாம் மற்றும் ஆறாம் பாகங்களைப் படிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன்.  மேலும் இப்புத்தகத்தைப் படித்த பின் என் வாழ்வில் ஓர் அதியமும் நடந்தது. கடந்த ஒரு வருடமாக எனக்கு வீட்டில் வரன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்தபொழுது எனக்கு ஒரு வரன் வந்தது. இப்பொழுது அவ்வரனே முடிந்துள்ளது. ஆவணி மாதர் இருபத்தியிரண்டாம் தேதி அன்று எனக்கு நிச்சயதாம்பூலமும் சிறப்பாக நடந்தேறியது.

Share:

Writer Balakumaran Irandaavadhu Kalyanam Novel Free Download



Irandavathu Kalyanam is a splendent novel in Tamil literature. Entirely it is a fiction type novel. The plot of this book is fascinating. The Tamil distinguished author Balakumaran wrote this book. If you read it, I hope you will get much enjoyment. Tamil books PDF makes a PDF format of this book. 




Writer Balakumaran Irandaavadhu Kalyanam Novel Free Download

  • Book Name: Irandavathu Kalyanam
  • Author: Balakumaran
  • Genre: Fiction
  • Category: Novels
  • Total pages: 61
  • PDF Size: 05 Mb
Share:

Writer Balakumaran Udayaar Part – 4 Novel Free Download

 


தங்களின் கட்டுரையைப் படித்ததிலிருந்து, அந்த பக்தி ஒருமுறைபடுத்தப்பட்டு சீராக மாறியது. முண்டகக் கண்ணி அம்மன் தலவரலாறு அறிந்து  நான் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். 

தங்கள் கட்டுரையைப் படிக்கும் சில நாட்களுக்கு துன் எனக்கு உறக்கத்தில் ஒரு கனவு வந்தது. அதன்படி, அம்மன் தற்போதுள்ள கர்ப்பக் கிரகத்திற்குப்பின் உள்ள நாகலிங்கத்திற்கு 4 அடியின் கீழ், தெளிந்த தண்ணீரீன் மேல் உள்ள அழகிய தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் அழகிய காட்சி என் கண்ணில் தென்பட்டது.

எனக்கு ஏற்பட்ட வியப்பு என்னவென்றால் ,சில தினங்களுக்குப் பின் இதே கருத்தைத் தாங்கள் ஒரு சொற்பொழிவில் கூற நான் கேட்க நேர்ந்தது.

Writer Balakumaran Udayaar Part – 4 Novel Free Download

வகை:வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:416
பதிப்பு:10
Published Year:2009
Share:

Writer Balakumaran Udayaar Part – 3 Novel Free Download

வகை:வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:512
பதிப்பு:10
Published Year:2010

உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா. நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே. இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளியாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித்தருகிறேன்.அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுதி முடியாது என்று என் பதிப்பாளரை பயமுறுத்தினார்களே. 

இப்புதினத்தை சோழ மக்களின் நாகரிகத்தை அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்ததை பெருவுடையார் கோயில் கட்டிடக்கலைச் சிறப்பை  கணித மேன்மையை,  செல்வச் செழிப்பை வெளிக் கொணர்ந்த என் அரசர் சோழமாமன்னர் சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் அவர்கள் பாதங்களில் வைத்துப் பணிகிறேன்.

Share:

Writer Balakumaran Gangai Konda Chozhan Part-4 Novel Free Download

 


கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புகிறார்கள். ராஜேந்திரர் இதானால் கோபமடைந்து ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்க முடிவெடுக்கிறார். ராஜேந்திரர் வீரமாதேவி உடன் நாகைக்கு செல்கிறார் போர் கப்பல்களை வாங்க மற்றும் கைபற்ற முடிவெடுக்கிறார். இதனிடையே இடங்கை வலங்கை படை வீரர்களிடைம் பகை மேலும் வலுக்கிறது. இராஜேந்திரர் ராஜாதிராஜானை இளவரசு பட்டம் கட்டுகிறார் , அவனும் தனக்கு தனியாக சபையை உருவாக்குகிறான்.

கங்கே யாதவ் சோழ நாட்டிற்குள் புகுந்து இராஜேந்திறரை கொல்ல முயற்சித்து , அரையன் ராஜராஜனிடம் அகப்படுகிறான். அவனிடம் எல்லா பதில்களையும் பெற்றுவிட்டு அவனை கொன்று விடுகிறார். ராஜேந்திரர் அம்மங்காவை வேங்கி நாட்டிற்கு அனுப்புகிறார். அரையன் ராஜராஜனையும் அனுப்புகிறார். சோழர் படை ஸ்ரீ விஜயத்தை நோக்கி வீறு கொண்டு சென்றது.

ஸ்ரீ விஜயத்தை கைபற்ற தான் முதலில் வலுவான கடற் படையை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்து, மீகாமன் மற்றும் மாலுமிகளை தேர்தேடுக்கிறார். ஒரு கொள்ளைக்கார கப்பலை கைப்பற்ற முயலும்போது, மாணிக்கவாசகன் என்ற பண்டியனாட்டனை சந்திக்கிறார். அவன் கடல் மற்றும் அதன் போக்கினை எடுத்து உரைக்கிறான்.


வகை:சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:656
பதிப்பு:2
Published Year:2014
Share:

Writer Balakumaran Gangai Konda Chozhan Part-2 Novel Free Download

 

வகை:சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:568
பதிப்பு:6
Published Year:2019


ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது. ஜெயசிம்மன் (மேலைச் சாளுக்கிய மன்னன்) கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான். விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் சாளுக்கியத்தின் அரசனாக்க ஜெயசிம்மன் முயலுகிறான். இதனால் கீழை சாளுக்கியம் தன் வசமாகும் என்று எண்ணுகிறான்.

விமலாதித்தன் உடல் நலக் குறைவால் இறக்கிறான். கீழைச் சாளுக்கியதைக் காப்பாற்ற ராஜேந்திரரின் மகன் மனுகுல கேசரி தலைமையில் சோழப் படை செல்கிறது. போரில் மனுகுல கேசரி இறக்கிறான் மற்றும் மூன்று தளபதிகள் கொல்லப்படுகிறார்கள்.

ராஜேந்திரர் தனது மகளான அம்மங்கா தேவியை நரேந்திரனுக்கு மணமுடிக்க முடிவெடுக்கிறார். இதனால் சோழ நாடும், கீழைச் சாளுக்கியமும் மேலைச் சாளுக்கியதிடமிருந்து பாதுக்கப்படும் என்று கருதுகிறார்.

Writer Balakumaran Gangai Konda Chozhan Part-2 Novel Free Download
Share:

Writer Balakumaran Gangai Konda Chozhan Part-1 Novel Free Download

வகை:சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:568
பதிப்பு:7
Published Year:2014

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புகிறார்கள். ராஜேந்திரர் இதானால் கோபமடைந்து ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்க முடிவெடுக்கிறார். ராஜேந்திரர் வீரமாதேவி உடன் நாகைக்கு செல்கிறார் போர் கப்பல்களை வாங்க மற்றும் கைபற்ற முடிவெடுக்கிறார். 

இதனிடையே இடங்கை வலங்கை படை வீரர்களிடைம் பகை மேலும் வலுக்கிறது. இராஜேந்திரர் ராஜாதிராஜானை இளவரசு பட்டம் கட்டுகிறார் , அவனும் தனக்கு தனியாக சபையை உருவாக்குகிறான். கங்கே யாதவ் சோழ நாட்டிற்குள் புகுந்து இராஜேந்திறரை கொல்ல முயற்சித்து , அரையன் ராஜராஜனிடம் அகப்படுகிறான். அவனிடம் எல்லா பதில்களையும் பெற்றுவிட்டு அவனை கொன்று விடுகிறார். ராஜேந்திரர் அம்மங்காவை வேங்கி நாட்டிற்கு அனுப்புகிறார். அரையன் ராஜராஜனையும் அனுப்புகிறார். சோழர் படை ஸ்ரீ விஜயத்தை நோக்கி வீறு கொண்டு சென்றது.



Share:

Writer Balakumaran Anbulla Maan Vizhiyae Novel Free Download


 Anbulla Maan Vizhiyae is a famous fiction novel in the Tamil language. This book is an excellent collection from the familiar Tamil author Balakumaran. This book contains only 44 pages. If you want to enjoy your reading time, you can try this book.

  • Book Name: Anbulla Maan Vizhiyae
  • Author: Balakumaran
  • Genre: Fiction
  • Category: Novels
  • Total pages: 44
  • PDF Size: 03 Mb
Writer Balakumaran Anbulla Maan Vizhiyae Novel Free Download


Share:

Writer Balakumaran Aanandha Vayal Novel Free Download

 


வகை:நாவல் (Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:280
பதிப்பு:10
Published Year:2009

வெகுஜன வாரப் பத்திரிகையில் வெளியாகும் தொடர்நாவல் வாசகர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது உண்மையாயினும், அத்தொடர் நாவல் புத்தக ரூபமாகி வெளிவருகையில்தான் ஒரு எழுத்தாழனுக்கு வாசகரின் முழுமையான மதிப்பீட்டை அறிந்துகொள்ள முடிகிறது.

பத்திரிகை மூலமாக எனக்கு வரும் கடிதங்கள் அல்லது பத்திரிகைகட்கு தொடர் நாவல் வளரும் போது, முடியும் போது வரும் கடிதங்கள் இவைகளை விட நேரடியாய் எனக்கு, முழுநாவல் படித்த பிறகு வரும் வாசக விமர்சனங்கள் தெளிவாய் இருக்கின்றன.

Share:

Writer Balakumaran Udayaar Part – 6 Novel Free Download

 


உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.

இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளியாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித்தருகிறேன்.அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுதி முடியாது என்று என் பதிப்பாளரை பயமுறுத்தினார்களே. இப்புதினத்தை சோழ மக்களின் நாகரிகத்தை அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்ததை பெருவுடையார் கோயில் கட்டிடக்கலைச் சிறப்பை  கணித மேன்மையை,  செல்வச் செழிப்பை வெளிக் கொணர்ந்த என் அரசர் சோழமாமன்னர் சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் அவர்கள் பாதங்களில் வைத்துப் பண.


வகை:வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:536
பதிப்பு:11
Published Year:2011
Share:

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com