கடலோர குருவிகள் [Kadalora Kuruvigal] by பாலகுமாரன் (Balakumaran) Novel Free Download

எழுத்துச் சித்தர், ஞானி, மஹான் பாலகுமாரன்” அவர்களால் 1995-ம் வருடம் எழுதி வெளியிடப்பட்ட "கடலோரக் குருவிகள்" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை. ( பக்கம் 121-123 )
"மனுஷா மனசு விசித்திரமானது மாதவா. மனசுக்கு நீ எதைக் கொடுக்கறியோ அதை வச்சிக்கிட்டுத்தான் விளையாடும். உன் மனதை நீ உற்றுக் கவனிக்க கத்துக்கணும்.
ஏன் என் மனசு இப்படி யோசிக்கிறது "அப்படீன்னு யோசிக்கக் கத்துக்கணும். இதைச் செய், அதைச் செய்யின்னு ஏன் மனசைத் தூண்டுதுன்னு பார்க்கக் கத்துக்கணும்.
மனசை உற்றுப் பார்க்கக் கத்துக்கணும். மனசை உற்றுப் பார்க்க பார்க்க அது கனிய ஆரம்பிச்சுடும்."
"மனசு கனியறத எப்படிப்பா தெரிஞ்சுக்கறது?"
"அன்பா பார்க்கற புத்தி வந்துரும். எந்தச் சந்தர்ப்பத்திலேயும் சிரிப்போட அமைதியா இருக்கும்."
"எந்த நேரத்திலேயும் மனசை உற்றுப் பார்த்துண்டேயிருக்க முடியுமா?"
"முடியும். ஆரம்பத்துல கொஞ்சம் பயிற்சி அவசியம். அதுக்குத் தியானம்னு பேரு. தியானம் பண்ணியும் மனசு கனியாம போகலாம்."
"எப்படிப்பா?"
"தியானம் பண்றோம்ங்கற பெருமையே கர்வத்தைக் கொண்டுவந்து கொடுத்துடும். அந்தக் கர்வம் உன்னை அழிக்கும். தியானம் பண்ணி மனசு மாறுவதைக்கூட கவனிச்சுட்டு அலட்டாத இருக்கணும்."
"மனசு மாறிடுத்துன்னு எப்பத் தெரியும்?"
"நல்லா தூங்கினேன்னு உனக்கு எப்போ தெரியறது. விழிச்சுக்கற போதுதானே. ஒரு விடுதலை உணர்வு தோணும். இதை வார்த்தையில சொல்ல முடியாது. வாக்கியமா மாற்ற முடியாது.
தித்திப்பை எவ்வளவு தித்திப்புன்னு யார்கிட்ட சொல்லுவே. அது ஒரு உணர்வு அவ்வளவுதான். எது பற்றியும் வருத்தம் இருக்காது. எது பற்றின எக்காளமும் இருக்காது."
"அப்பா, நான் வாழ்க்கையில ஜெயிக்கணும்னு வீட்டை விட்டுப் போறேன். நீ என்னமோ சுவாசம், மனசுன்னு ஆன்மீகமா சொல்லித்தரியே."
"வாழ்க்கை வேற, ஆன்மிகம் வேறயா. நல்ல வாழ்க்கைக்குப் பேரு ஆன்மீகம். ஆன்மீகத்துக்குப் பெயர் நல்ல வாழ்க்கை.
நீ சம்பாதிக்கப் போற பணம் உனக்கு சந்தோஷத்தைத் தர வேண்டாமா? உன் சம்பாத்தியம் உனக்குப் பயத்தைக் குடுத்ததுன்னா? உன் சௌகர்யம் உனக்குச் சோர்வு கொடுத்ததுன்னா என்ன பிரயோஜனம்.
உன் மனசை உற்றுப் பார்க்க எமோஷன் குறையும். எமோஷன் குறைஞ்சா எதிரே இருக்கறவாள புரியும். நீ எங்க போனாலும் எது பண்ணினாலும் பிழைச்சுக்கலாம்.
எந்த இடத்திலேயும் நீ உன்னைத் திணிச்சுக்காத மாதவா. நீ இருக்கற இடத்துக்கு இயல்பா இருக்கியான்னு பாரு. தண்ணீர்ல சப்பணமிட்டு உட்கார முடியாது. தரையில மிதந்துண்டே போக முடியாது. இவ்வளவுதான். போயிட்டுவா."
(இந்தப் பதிவினை வாசித்த பிறகு ஏற்படும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் முழுவதும் உரித்தானவர் இதை எழுத்தாக்கி படைப்பித்த ஆசிரியர் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களே.)
நன்றி.
குருவே துணை.
Share:

1 comment:

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com