Writer Balakumaran Quotes

Balakumaran Quotes




சூழ்நிலைக்கு ஓடுவது தோல்வி.
சூழ்நிலையில் தன்னை இழப்பது மரணம்.
சூழ்நிலை தாக்கும்போதே யோசிப்பது யுத்தம்.



உங்கள் மனதையும், உங்கள் புத்தியையும் தனித்தனியே உற்றுப்பார்க்க கற்றுக்கொண்டால் இதனுடைய வலிமைகளும் அட்டகாசங்களும் உண்மைகளும் உங்களுக்குப் புரிய வரும். -கதை கதையாம் காரணமாம்.

சக்தி மிகுந்த குரு இருக்கும் இடத்தில் அமைதி தளும்பி நிற்கும். அருகே போய் நிற்க மனமாற்றம் ஏற்படும். -குரு.

மகிழ்ச்சி என்பது கார், பங்களா, காசு, பணத்தில் இல்லை. நன்றாக உண்டு நன்றாக தூங்க முடிகிறதா என்பதுதான் மிக முக்கியம். உண்மையிலேயே உங்களைப் பற்றி அக்கறைப்படுகிற, அன்பு காட்டுகிற மக்கள் இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.

திருமணம் என்கிற விஷயம் புனிதம் என்கிற வார்த்தையோடு எப்படி தொடர்பாயிற்று.சடங்கு புனிதமா. சந்தித்தது புனிதமா.சம்மதம் புனிதமா. யோசித்துப் பார்க்கையில் சந்தித்து, சம்மதமாகி, சம்மதத்தை சடங்காக்கியதே திருமணம்.சந்தித்தும், சடங்கும் செயல்கள். சம்மதம் என்பது எண்ணம்., ஓர் உணர்வு. சம்மதம் எதற்கு, எதன் பொருட்டு. வாழ்வதற்கு.திருமணச் சம்மதம் என்பது ஆணும் பெண்ணும் ஒரு கூரைக்குக் கீழ் உணர்வுகளைப் பரிமாறி வாழ்வது. எந்த உணர்வுகளை. காதல்,காமம், தாபம்,சோகம், மகிழ்வு, நல்லது, கேட்டது எல்லா உணர்வுகளையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி வாழ்வது.

-இனிது இனிது காதல் இனிது.

ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே தோழன். அவனே தெய்வம் போன்றவன்.தந்தை என்பது மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான விதிமுறைகளின் சுருக்கம். ஒருவனுக்கு நல்ல தந்தை கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம்.

உண்மையாய் இருப்பதுதான் சுயபலம். அப்போது பேச்சும் செயலும் மிக மிகச் சுதந்திரமாக இருக்கும். அந்தச் சுதந்திரம் எவரையும் காயப்படுத்தாது இருக்கும். -குரு.

“பெண், விரல் நீட்டிக் குற்றம் சுமத்தினால் கடவுளையும் காமுகன் என்று உலகம் நம்பும்”
― பாலகுமாரன் (Balakumaran), தாயுமானவன் [Thayumanavan]

“பசித்தபோது உணவு கிடைப்பது பெரிய வரம்”
― பாலகுமாரன் (Balakumaran), தாயுமானவன் [Thayumanavan]

“எது உயர்ந்ததோ அது தாழும், எது தாழ்ந்ததோ அது உயரும்”
― பாலகுமாரன் (Balakumaran), கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]

“இந்த பெரியபுராணக்கதைகள் நமக்கு என்ன சொல்கின்றன என்று நான் திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தேன். இந்த பரதகண்டத்தின் எந்த மூலையிலும் இப்படிப்பட்ட செயல்கள் நிகழ்ந்திருக்குமோ என்று கேள்வி கேட்டேன். இந்த சோழ, சேர பாண்டிய நாட்டில்தான், தமிழ் பேசும் நல்லுலகில்தான் இப்படிப்பட்ட அற்புத விசயங்கள் நடந்திருக்கின்றன. தட்சிண பூமி புண்ணிய பூமி தாயே. சிவனைச் சேர்ந்தவர்களுக்கு தான் என்றும், தனது என்றும் ஒருநாளும் கர்வம் கூடாது. சிவனைச் சேர்ந்தவர்கள் ஒரு நியதிக்கு கட்டுப்பட்டவராகத்தான் இருக்கிறார்கள். இதுதான் நமது நாகரிகம். இதுதான் நமது பண்பாடு." - செப்புப் பட்டயம், ப.93”
― பாலகுமாரன் (Balakumaran)

“புத்தர் என்கிற பெயரில் அமைதி என்கிற பெயரில் அன்பு என்கிற பெயரில் ஒரு குழு செய்கிற அட்டகாசம்”
― பாலகுமாரன் (Balakumaran), கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]

“யார் எதிரி? யார் நண்பன்? காலம் காட்டும் மாயை இது. காலம்தான் எதிரி. காலம் தான் நண்பன். காலம்தான் குரு. காலமே கடவுள்.”
― Balakumaran, Thayumanavan

“ரீகலெக் ஷ ன் ஆஃப் தாட்ஸ் மனுஷாளுடைய பெரிய சொத்து இது. நடந்ததை நினைவுக்குக் கொண்டுவந்து யோசனை பண்ணத் தன்னைப் பக்குவப் படுத்திக்கறது மனுஷாளுக்கு மட்டுமே உண்டு. மிருகம் மாதிரி சட்டென்று கோபமோ, காமமோ வந்துடறதில்லே. வாலை மிதிச்சவுடனே பாஞ்சுடறதில்லை. கோபப்பட்டா என்னாகும்னு நம்மாலே யோசிக்க முடியும். தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி. முடியாதவன் மிருகம். யோசனை பண்ணினதின் விளைவு இன்றைய வாழ்க்கை, வளர்ச்சி.”
― Balakumaran, Irumbu Kudhiraigal

“ஞானத்துக்கும் தொழிலுக்கும் என்னப்பா சம்பந்தம்? இரை தேடறது நமக்கும் உண்டே. புத்தியை வயத்தாலே கட்டிப் போட்டிருக்கே. ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழி யாய்ன்னு ஒளவைக் கிழவி பாடறாளே. இரை தேட வேண்டாம்னா பாறாங்கல்லாய்ப் போயிடுவோம். பாறைக்குப் பிரச்சனை இல்லை. மிருகம் மாதிரி இரை மட்டும் தேடற சுபாவமும் இல்லை. இரையும் தேடி ஞானமும் தேடி... அட்டா என்ன சுகம், எப்படிப்பட்ட போராட்டம். இது பனிஷ்மென்ட் இல்லை அம்பி. சுயமா புடம் போட்டுக்கற வித்தை, சுவாரஸ்யமான விளையாட்டு.”
― Balakumaran, Irumbu Kudhiraigal

“மானாபிமானம் விட்டுத் தானாக நின்றவருக்கு என்று ஒரு பாட்டு வரும். அப்படி நின்றவருக்குப் பெயரில்லை; விலாசமில்லை;”
― Balakumaran, Sri Ramana Maharishi

“அந்த எல்லை முடிந்து மறுபடி பார்த்த”
― Balakumaran, Udaiyaar Part - II

“மனிதர்கள் எல்லோரையும் பகைத்துக் கொள்ள முடியாது. ஆனால் அதேநேரம் தினமும் யாரையாவது பகைத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். பகைக்கு ஏற்றவர் யார் என்று மனம் தேடிக் கொண்டேயிருக்கும். அவர்களை எந்தக் காரணமுமின்றி பகைத்துப் பழிவாங்கும் மனம் விசித்திரமானது. ஒருவனுக்குத் தன மனம் போடும் ஆட்டம் பற்றிய பிரக்ஞை இல்லையெனில் அவன் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. முன்னேற முடியாதவர்கள்தாம் மற்றவர்களை அதிகம் தொந்தரவு செய்கிறார்கள்.”
― பாலகுமாரன், குன்றிமணி [Kundrimani]

“இதுதான் வாழ்க்கையின் சுழற்சி, இது எப்போது மீறப்பட்டாலும் பிரச்சினை வரும். பெண்களைத் தாங்குவது என்பது ஆண்களின் கடமை. தன்னைத் தாங்கும் ஆண்களுக்குப் பணிவிடை செய்து, அவனைக் காரியங்கள் செய்யச் செய்வது பெண்களின் கடன். இது இரண்டிற்கும் அடிப்படை அன்பு. பரஸ்பரம் மதிப்பு. இந்தச் சோழ தேசத்தில்”
― Balakumaran, Udaiyaar

“ஏன் அந்தப் பற்றுமற்று இரு என்று சொல்கிறேன் தெரியுமா? எந்தப் பற்று வைத்தாலும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. நீ எதன் மீது நாட்டம் வைத்தாலும் அது உன்னைக் காப்பாற்றப் போவதில்லை. இடையறாது இயற்கை தன்னை சரி செய்து கொண்டிருக்கின்ற வேகத்தில் நீங்கள் உயர்வதும், தாழ்வதும் நடக்கிறது. உங்களால் ஆவது இங்கு ஏதுமில்லை. காட்டாற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகிற சருகாக நீ இருக்கிறாய்.”
― Balakumaran .., Karnanin Kadhai

“இது மனிதனின் பலகீனமான நேரம் வலியும் அவமானமும் ஆளைக்குடைசாய்த்து விட்ட நேரம். கோபாலன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் தன் திட்டங்களைச் சொல்லிவர அந்த மாலை வேளையில் சிறையில், அரையிருட்டில் சுலபமாய்த் தலைவனானான்.”
― Balakumaran, Mercuri Pookkal

“இத்தனை நாள் அனுபவிச்சுட்டு....' சியாமளி பேசினது நினைவுக்கு வந்தது. எல்லா பெண்களும் ஏன் கூடல் அநுபவத்தை ஆணுக்கே சொந்தமாக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. எவனோ சொன்னது நினைவுக்கு வருகிறது When rape is inevitable like back and enjoy it இந்தத் தேசத்துப் பெண் எவளாவது இதைச் செய்வாளோ? கடைசிவரை போராடி இறந்தாள் சாவது உசத்தியானது. அப்பா - உயிர் எத்தனை அல்பம் இவர்களுக்கு, யோசிக்க யோசிக்க தலைக்குள் கனல் ஏறிக் கண்ணை அழுத்திற்று.”
― Balakumaran, Mercuri Pookkal


Share:

0 comments:

Post a Comment

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com