Writer Balakumaran "பந்தயப் புறா " Novel .

 பந்தயப் புறா



பாலகுமாரன் எழுதி(வீசி)யது.

 விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு .மொத்த பக்கங்கள் 304 .11ஆம் பதிப்பு 2016.

 விலை ரூபாய் 145.

தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாவல் வரிசை.

படிமங்களைக் கொண்டு கவிதைகள் வடிப்பார்கள் .படிமங்களை கொண்டு கவிதை தலைப்பு கதை தலைப்பு இடுவார்கள் .படிமங்களை கொண்டு வாழ்க்கையில் நல்லது்களை தொட்டுக்காட்டி செய்வதில் வல்லவர் பாலகுமாரன் .

      பாலகுமாரன் அவர்கள் பந்தயப் புறா தலைப்பு தந்து இருக்கிறார்கள் .பந்தயம் என்பது என்ன ? எது பந்தயம் ? பந்தயம் என்றால் என்ன? எதற்கு பந்தயம் ? பந்தயத்தில் வெற்றி பெற முடியுமா ?யாருக்கு பந்தயம் ?என்று வரும்போது ஆணுக்கு மட்டுமா பெண்ணுக்கு பந்தயமா ?யார் ஆடப் போகிறார்கள்.?பந்தயத்தில் வெற்றி பெற என்னென்ன உத்திகள் கையாளப்பட வேண்டும்? 

என்னவிதமான  உத்திகளை கையாண்டு யாருக்கும் பாதகம் இல்லாமல் வெற்றிபெற வேண்டும்?வாழ்க்கையே ஒரு பந்தயம் ஆகும்போது புறா என்பது யார் ?ஜெயிக்குமா ?ஜெயிக்க தெரியுமா? புறா என்பது பெண்களை குறிப்பதாக இந்த நாவலில் சுட்டிக்காட்டப்படுகிறது !

   இந்தப் புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும் என்று அந்த காலத்திலேயே பெண்ணுக்கு புறாவை ஒப்பிட்டுப் பேசி இருக்கிறார் கவிஞர்.

      துணிந்துவிட்டால் முடியாதது ஒன்றும் இல்லை .ஆவதும் அழிவதும் எல்லாம் அவளாலே.

            "நேர்கொண்ட பார்வை" எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன் .முதல்முதலாக திரையிடப்பட்ட நாளன்றே ஹூஸ்டன்  நகரத்தில் பார்த்தேன் . பெண்கள் கூட்டம் தான் அதிகம்..பெண்ணின் வலி உணர்ந்து இறுதியில் கதாநாயகனுக்கு அங்கு நீதிமன்ற வாயிலில் நிற்கும் 

ஒரு பெண் காவலர் வணங்கி கை கொடுக்கும் போது அழுதே விட்டேன் .

      பெண்ணின் வலி ,

கண்ணின் வலி போல . தனக்கு வந்தால் தான் உணர முடியும். உணர்ந்தவர் பாலகுமாரன் .அதை எழுத்தில் வடித்து பந்தயப் புறாவாக நமக்கு அளித்திருக்கிறார். 

    நன்கு தெரிந்தவர்கள், விஷயம் தெரிந்த வல்லுனர்கள் , அறிஞர்கள் அணிந்துரை அளிப்பதை வழக்கமாக கண்டிருக்கிறோம். ஆனால் இந்த புத்தகத்திற்கு ஆசிரியரின் தாயே மனமுவந்து அணிந்துரை வழங்கியிருப்பது முன்னுரையை வழங்கியிருப்பது யாருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம் என்றே சொல்லலாம்.

       கீழ்க்கண்டவாறு  பாலகுமாரனும் தெரிவிக்கிறார் :

"சினேகமான என் பத்து வயதில் ஆரம்பமான இலக்கிய பாடம் இன்னும் தொடர்கிறது .இன்றைக்கும் என் ஆன்மா எனக்கு விசிறி .விமர்சிகி. 

     முன்னுரை எழுது என்று கேட்டேன். சின்ன ஸ்டூலில் முதுகு வலிக்க கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஆட்பட்டும் தயங்காது  தன்னை வருத்தி என்னை பாராட்ட எவ்வளவு பெரிய முனைப்பு .

    என் எழுத்து அத்தனைக்கும் நீயே காரணம் யம்மொய்.எல்லோருக்கும் அம்மா அம்மாதான் எனக்கு நீ ஆசிரியை, தோழி, எல்லாவற்றையும் விட அற்புதமான 

மனுஷி.

      எந்த எழுத்தாளனுக்கு அம்மா முன்னுரை எழுதிக் கொடுத்திருக்கிறார். நீ எனக்கு கிடைத்த வரம் நீ என் பலம் .

     நீ நான் ; நான் நீ "

என்று பாலகுமாரன் மெய்யுருகி பொய் இன்றி மெய்  விவரித்திருக்கிறார்.

******

இனி கதையை பார்ப்போம் :

      ஒரு சிறு கதையை எழுதினால் அதன் விரிவாக நாவல் எழுதப்படும் பழக்கம் உண்டு .சிறுகதை அளிக்கின்ற பிரச்சினைகளை கொண்டு அதற்கு விடையாக பல நாவல்கள் பல கதைகள் அதன் தொடர்ச்சியாக எழுதப்படுவது உண்டு .

         அதுபோல்தான் அகல்யா அவள் கணவன் சிவசு குறித்து எழுதப்பட்ட நாவலை தொடர்ந்து இந்த நாவல் எழுதப்பட்டு இருப்பதாக நினைக்கிறேன்.

  அகல்யா அவள் கணவன் சிவசு போல எல்லோருக்கும் அமையுமா ?அது நிஜமா? உண்மையா ?கதாசிரியரின் கற்பனையா? என்று வாசகர்களிடையே எழும், எழுப்பப்பட்ட கேள்வியின் தொடர்பாகத் தான் இந்த நாவல் பந்தயப்புறா எழுதப்பட்டிருக்க வேண்டும்.

         அதனை திருவளர்ச்செல்வி மூலமாக ஆசிரியர் எழுதி இருக்கிறார்.

           பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கட்டுப்பாடான குடும்பத்தைச் சார்ந்த பெண்ணொருத்தி மற்றவர்களின் வாழ்க்கை முறைகளையும் பறந்து திரியும் அவர்களையும் பார்த்து தானும் மேலே மேலே பற பறவென துடிப்பது, திருநிறைச்செல்வி ஒரு அற்புதமான படைப்பு.

     படிக்கப் படிக்க நமக்கே பறக்க வேண்டும் போல ஒரு உத்வேகம் வரத்தான் செய்கிறது. 

        வீட்டை விட்டு வெளியே வந்து அண்ணனுடைய நண்பன் கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து வேலையும் கற்றுக் கொள்கிறாள். மேலே மேலே படிக்கவும் செய்கிறாள். தவசு போல ஒரு நண்பன் அவளுக்கும் கிடைப்பதாக கதை முடிகிறது.

 .If you think that educating your girl is enough for her to tackle the boundaries of tradition, then you are wrong. 

You have to ensure that not only you empower her with education, but also make her strong enough to resist the evils of societal pressure under which she often buckles. 

Her life and honour are far more important than "What will people say?" A little emotional support from the parents can make the life of a daughter abused by her in-laws beautiful."

~ Neelam Saxena Chandra, Indian Poet..


Share:

0 comments:

Post a Comment

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com