writer Balakumaran Thoughts to get success in life.


 
பாலகுமாரன் சிந்தனைகள் - வெற்றி வேண்டுமெனில் சோம்பலை உதறுங்கள்.  

அரை வயிறு உணவு பசியை அடக்கும். குறைவாக உண்ணுதல். உறக்கம் வரவழைக்காது. உறங்கும் போது உறக்கத்தை விரும்பாமல் எழுந்திருந்தும் செய்ய வேண்டிய வேலைகளை நினைத்து கொண்டு தூங்குவது நலம்.
தூக்கம் கலைந்த பிறகு தூக்கம் தொடருவது பேராபத்து. கொஞ்சம் நேரம் தூங்குகிறேன் என்று சொல்வது கேவலம். மூளையிலிருந்து உறக்கம் கலைந்த மறுநிமிடம் எழுந்து விட வேண்டும். பல் தேய்க்க நீர்பட்டவுடன் புத்தி சுறுசுறுப்பாகி விட வேண்டும். முதல் வேலையான பல் தேய்த்தலை முழு முனைப்போடு செய்ய வேண்டும்.
‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார். சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிருஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்.
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார். 
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்’. 
என்று பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்று உண்டு . இது அர்த்தம் பொதிந்தது.
மூளையில் அலட்டல் மிச்சமிருக்கிறது. அந்த அலட்டல் கனவாக உங்களை அலைகழிக்கும். நல்ல தூக்கம் இல்லாது போகும். பேச்சுக் குறைந்தால் நன்கு தூங்கலாம். நல்ல தூக்கம் நாலு மணி நேரம் போதும்.
விடியலில் எழுந்திருத்தல், புத்திக்கு பலம் கொடுக்கும்.
தூக்கம் ஒரு மருந்து, அது,அளவு தாண்டக்கூடாது. அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதும்,எப்போதும் பாட்டு கேட்பதும் தூக்கம் கவிழ்க்கும்.பொழுதுபோக்கு என்பது பிழைப்புக்கான வேலையாக இருந்தால், அதாவது வேலையே பொழுதுபோக்காக இருந்தால் வெற்றி நிச்சயம்.

உழைப்புதான் பிரபலமாவதற்கு ஓரே வழி. அதிருஷ்டத்தில் உயர்ந்தாலும், உழைப்பே நிலையான மரியாதையைத் தரும்.






Share:

0 comments:

Post a Comment

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com